Cart empty

மொழிக் கொள்கை

இலங்கையில் மொழி தொடர்பான அடிப்படைச் சட்டமானது 1978 இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் ivஆவது அத்தியாயத்தில் காட்டப்பட்டுள்ளது. அதிலுள்ள ஏற்பாடுகள் 13ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தினாலும் (1987) 16 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தினாலும் (1988) திருத்தஞ் செய்யப்பட்டுள்ளன. மேலும் அரசியலமைப்பின் iiiஆவது அத்தியாயத்தில் 12(2)ஆவது உறுப்புரையில் மொழி உரிமையானது அடிப்படை உரிமையாகக் காட்டப்பட்டுள்ளது.

சிங்களம் மற்றும் தமிழ் இலங்கையின் அரசகரும மொழிகளாவதோடு அவை தேசிய மொழிகளுமாகும். ஆங்கிலம் இணைப்பு மொழியாகும். அரசகரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான சட்டபூர்வ ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக அரசகரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான நிர்வாக ரீதியிலான ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.


புதுப்பிக்கப்பட்டது: 10-10-2017
மேலே